Saturday, March 21, 2015

வெறுமை

                                         வெறுமை


                 வெளிச்சம் பரவியது உடலெங்கும் 
               
                                                                 வெற்று  உடலை காண்பித்தேன் 
                
                  வெளியில் சிறிது ஒய்வு எடுத்தேன்  
                    
                                                          வெற்றிலை போல்  மீண்டும் கிடந்தேன் 

                   உள்ளகிடைக்கை எதுவும் அங்கு இல்லை 
               
                                                உன்னதமாய் தெரிய வில்லை எதுவும்  எனக்கு 

                இயந்திரத்தனம் முடிவுற்று வலியுற்று 

                                                                இயல்பாய்    நடந்தேன்                 

                   ஏதொ முழுதூக்கம் முடிந்து எழுந்த 

                                                     ஏதும் அறியாத குழந்தை போல  

                      வெளியில் நடந்தேன் யாருடைய  ஓரப் 

                                       பார்வையும் சுட்டு  எரிக்கவில்லை என்னை 

                     தினமும் கடப்பவர்கள் தானே கணினியில் 

                             புதிதாய் என்ன தெரிந்து விட போகின்றது என்று 

                       அலுத்து கொண்டேன்  வீட்டை அடைந்ததும் அடுத்த ஒரு 

                               வாரத்துக்கான உணவு கட்டுப்பாடு  பூஜ்ய இடைக்கான 

                           உடற் பயிற்சிகள் ஐயோ அப்பா நினைத்தாலே நடுக்கமாய்

                                இருக்கிறது  என்று எனக்காக  வாழ போகிறேன்  

                             எனக்காக வாழ தொடங்கிய அந்த நாள்தானே   
                                 
                                இதெல்லாம் தொடங்கியது                    

                            உள்ளம் கொடுத்தவன் என்று உடலை  கொடுத்தேன் அதை             

                                    அவனோ   உலகுக்கு கொடுத்தான் படச்செய்தியாய் 

                           பற்பசை விளம்பரத்துக்கும்  பெண்ணின் உடம்பை விலைக்கு         

                              வாங்கும் உலகம் என் உடலை

                           பரவலாக்கி பங்கம் செய்தது.

                             அவன் வாழ்க்கையில் அவன் நண்பர்கள்  மத்தியில்  

                         பெருமை   கொள்ளச்  செய்த அதே காணொளி   

                              என்னை  கானல் நீராய்   போக செய்தது ஏன் ?

                                  என்னதான் உற்று பார்த்தாலும்  எனக்கு என்னவோ 

                           இது உயிரற்ற பிண்டமாகத்தான் தெரிகிறது 

                                    காதல் இல்லை ஊடல் இல்லை அன்பு இல்லை 
                       
                     பாசம் இல்லை நேசம் இல்லை 

                            அமைதி இல்லை உணர்வு  இல்லை பெண்மை இல்லை 

                                வெறுமை வெறுமை மட்டுமே

                      என்னில்  தேடி என்னதான்  எடுக்கிறது இந்த உலகம் 

                                  வெறும்    வெறுமையை தவிர.
                            

Monday, March 9, 2015

Woman's Day

                              சர்வதேச மகளிர் தினம் 

                                               உலகில் பல தினங்கள் கொண்டாடப்படுகின்றன .அவற்றை போன்றுதான் மகளிர் தினம் என்ற ஒன்று கொண்டாடப்படுகிறது என்று கருதினால் அது  தவறு .20 ஆம் நூற்றாண்டின் வரலாற்றில் நடைபெற்ற மாபெரும் ரஷ்ய சோஷலிச புரட்சியின் அடையாளமாக பெண்களுக்கு கிடைத்த மாபெரும் உரிமை மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் .வெறும் தினம் மட்டும் கிடைத்து விடவில்லை உலக நாடுகளிலே முதன்முறையாக ஏன் மனிதனின் நாகரிக வளர்ச்சியின் உச்சமாக கிடைத்த மாபெரும் வரம் இந்த மகளிர் தினம்.வரலாறுகள் எழுதப்பட்டு விட்டன .உலகின் தொன்மையான திராவிட நாகரிகமான ஹரப்பா மொஹஞ்சதரா தோன்றிய இந்திய துணைக் கண்டத்தில் பெண்ணுரிமை எவ்வாறு உள்ளது என்று பார்த்தால் டெல்லி நிர்பயாக்களும் , தூத்துக்குடி புனிதாக்களும்,சிவகங்கை தமிழ் செல்விக்களும் காரி நமது முகத்தில் உமிழும் கேவலங்கள் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் நடந்து கொண்டிருகின்றன.பாரம்பரியம் என்கிறார்கள் ,கட்டுப்பாடு என்கிறார்கள் நதிகளின் பெயரை ,கடவுள்களின் பெயரை கூட பெண்ணின் பெயரில்தான் அமைக் கிறார்கள்.வீட்டிலும் பெண் குழந்தைகளை அதிக பாதுகாப்போடுதான் வைக்கிறார்கள் .பிறகு ஏன் கற்பழிப்புகளும்  ஆசிட் வீச்சுகளும்,கௌரவ கொலைகளும்  நடக்கின்றன . தவறு எங்கே அரசாங்க சட்டத் தில் இருக்கிறதா இல்லை ?சமூக மன நிலையில் இருக்கிறது ,நமது குழந்தைகள் காப்பாற்ற இயலாத எதை பற்றியும் துளியும் கவலைபடாத வக்கற்ற நிலையில்தான் இருக்கிறோம் .தூக்கு தண்டனை மட்டும் இந்த இழிநிலையை மாற்றி விடுமா என்ன ? நம்மிடம் தேவை ஒரு சமூக மாற்றம்  ஒட்டுமொத்த பழமையை குப்பை போல எரித்து விட்டு புது பெரு வழியில் மனித மாண்போடு நடை போட வேண்டும்.இந்த கற்பழிப்புகளையும் ,ஆசிட் வீச்சுகளையும் கௌரவ கொலைகளையும் அரசும் மட்டும் ஒழிக்க முடியுமா என்ன? கலாசாரம் என்ற பெயரில் மூடி வைப்பதினால்தான் மனமும் உடலும் நாற்றமெடுத்து கொண்டிருகிறது.காமம் வீட்டு வரவேற்பு அறையில் விவாதிக்கப்படும் விவாத பொருளாக வேண்டும் பாலியல் கல்வி கட்டாயாமக்கப்பட வேண்டும் இரு பாலர் பள்ளிகள் அதிகமாக்கப்பட வேண்டும் ஆண் பெண் நட்பு எவ்வளவு உணர்வுபூர்வமானது என்று வருங்காலத் தலைமுறை உணர வேண்டும் .கட்டிட தொழிலாளிகள் கூலி தொழிலாளிகள் முதல் தனியார் பள்ளி ஆசரியர்கள் வரை ஆண் பெண் சம ஊதியமும் 
சம மரியாதையும் பெற வேண்டும் .பெண் குழந்தைகள் அனைவருக்கும் தற்காப்பு கலை  அவசியமாக்கப் படல் வேண்டும்.ஆசிட் விற்பனை முழுமையாக முறைபடுத்தப் பட வேண்டும் .ஆண் பெண் நட்பு புரிதல் ,காதல் கல்யாணம் ,வரதட்சணை கொடுப்பது ஆகியவற்றை பற்றிய இன்றைய கண்ணோட்டத்தில் குறும்படங்களும் திரைப்படங்களும் எடுக்கப்பட்டு நாடு முழுவதும் ஒளிபரப்ப வேண்டும் ஆபாச இணையதளங்கள் முழுவதுமாக முடக்கபட்டு திரைக்கதைக்கு ஒவ்வாத ஆபாச படங்கள் அதிக வரி விதிப்புடன் மட்டுமே வெளியிட படவேண்டும்,பெற்றோரே  ஆயினும் பிள்ளைகளை அடிக்க எந்த உரிமையும் இல்லை என்று சட்ட முன் வரவு கொடு வர பட வேண்டும் .ஆதரவு அற்ற  குழந்தைகளை அரசே எடுத்து பராமரித்து வளர்க்க முன் வர வேண்டும்.இளஞ்சிறார் குற்றங்களில்  ஈடுபடுவதை தடுக்க குழந்தை தொழிலாளர் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் .நாடு முழுவதும் கல்லூரி வரை 100% இலவசமாக கல்வி கொடுக்க பட வேண்டும் .கலப்பு திருமணங்கள்  ஊக்குவிக்கப்பட வேண்டும் இவை எல்லாம் பல்வேறு விவாத தளங்களில்  விவாதிக்கப்  பட்டு நிறைவேற்ற  பட்டு வரும் வேளை புதிய விடுதலையும் விடிவையும் நமது வருங்காலத்துக்கு வழங்கும் .பயமில்லா  வாழ்வே பெரு வாழ்வு .மாதரை இழிவு செய்யும் மாந்தரில்லா உலகம் அமைப்போம் .

Friday, March 6, 2015

கவிதை- 2

                                   காணும் யாவரும் காண்பவரே

 உயர் தாழ் ஒன்றும் அறியேன் பணம் எனக்கோர் காகிதமே ஆடியும் அம்பாசிடரும் ஊர் சுற்றும் வாகனமே .

கருப்பு வெள்ளை யாவும் நிறமின்றி வேறில்லை காகமும் குயிலும் சத்தம் எழுப்பும் பறவைகளே கடவுள் சிலையும் கருங்கல்லும் ஒன்றே .

சாத்திரம் மூத்திரம் பாத்திரம் சூத்திரம் ஏதும் தெரியாது .
அறிவாளி முட்டாள்  யோக்கியன் அயோக்கியன் பெரியவன் சிறியவன் ஏதும் புரியாது எனக்கு.

பொய் புனைவு புரட்டு நடிப்பு ஏமாற்றம்  பித்தலாட்டம் எனக்கு வராது.

சுதந்திரமான என்னை பார்த்து எல்லாரும் பரிகசிப்பது ஏன் ? வருத்தப்படுவது  ஏன் ?

கிடைப்பதை உண்டு வெளியில் உறங்கி அம்மணமாய் நடக்கிறேன் வீறு நடை போட்டு கள்ளங்கபடமின்றி காற்றோடு காற்றாய்  சிரிக்கிறேன்.

ஏதோ புரியாத மனபிறழ்வு என்று சொல்கிறார்கள் மனம் முழுதும் கனத்த கனவான்கள்.
கேட்பவை எனக்கு எதுவும் கேட்பவை அன்றி வேறு எதுவும் இல்லை.
தூற்றினால் துயரில்லை ஏசினால் வருத்தமும் இல்லை பாவபட்டால் பரிதாபமும் எனக்கு இல்லை .

உணர்வு உண்டு உணர்வு இல்லை.
பேசுவோர் பேசட்டும் கேட்போர் கேட்கட்டும் காண்போர் காணட்டும் 
காணும் யாரும் காண்பவரே வேறொன்றுமில்லை. 

Tuesday, February 17, 2015

Srirangam Bye-Election

                                                 
                                                    திருவரங்கம் இடைதேர்தல்    


                                    சமீபத்தில்  நடைபெற்ற  இடைத்தேர்தலில்  96 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை அதிமுக  பெற்றுள்ளது .இது ஒன்றும் சாதரணமாக கிடைத்த வெற்றி அல்ல என்று அனைவருக்கும் தெரியும்.இந்த தேர்தல் தமிழகத்தில் சில கருத்துருக்களை மீண்டும் உண்மையாக்கி இருக்கிறது மற்றும் பல கருத்துருக்களை உடைத்து மூலையில் போட்டு இருக்கிறது .ஜெயலலிதா  குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்ட நிலையிலும் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையிலும்,அ திமுகவின் அசல் வாக்கு  வங்கிக்கு எந்த சூழ்நிலையில் பாதிப்பு வராது என்ற எதிர்பார்ப்பு  மீண்டும் நிருபிக்கப்பட்டிருகிறது.இத்தகைய அசைக்கமுடியாத வாக்கு வங்கி  திமுக உட்பட எந்த கட்சிக்கும் கிடையாது.இந்த வெற்றி அதிமுக திமுக இரண்டுக்குமான மாற்று நிச்சயம் பாஜக இல்லை என்பதை ஆணித் தரமாய் கூறிய தேர்தல் .இடைதேர்தல் பணபலம் ,தொகுதிக்கு ஆளும் கட்சியினால் கிடைக்கும் நன்மை ஆகியவற்றை மட்டும் அடிப்படையாய்  கொண்டு மட்டுமே தீர்மானிக்க படுகிற  தேர்தல்  என்பது நிரூபிக்க தக்க ஒன்று என்பதை நம் அனைவர்க்கும் உணர்த்தியுள்ளது.மக்களின் அலட்சியம் பத்திரிகைகளின் விளம்பரம் மற்றும் தவறுகளை மூடி மறைக்கும் திறமை ஆகிய காரண காரியங்கள்  ஆச்சர்யத்தை மட்டுமே  , அரசியலையும் அரசு இயந்திரத்தையும் உன்னிப்பாக நோக்குபவர்களுக்கு அளிக்கின்றன.

Monday, February 16, 2015

கவிதை-1

                                               

                                 அனேகமானவள்


                                  உனக்கு எப்படி இருக்கும் என்று  தெரியாது 
 சுவாசம்அற்று கிடக்கிறேன் எனதருமை  தோழியே 

                                          முழுமை கொண்டென்  என்று நினைத்தேன் என்னை நீ தொட்டபோது 

                         ஒளி வேகமும் மெதுவாகி போனது என் மனோ வேகத்தில்,
ரேடார் சப்தமும் நிசப்தமானது உன்  சொல்லில்

               வீண் குப்பையை வெற்றிடம் ஆக்கினாய்   உன்னை தவிர பிரபஞ்சம் ஏதும் கூட அறிகிலேன் 

                                          குருடன் கண்ட வெளிச்சம் போல முடவன் ஓடிய ஓட்டம் போல செவிடன் கேட்ட இசை போல ஊமை பாடிய பாடல் போல 

                                     புரிந்தும் புரியாத தினப் பொழுது போல அன்பெனும் ஆழியில் முழுவதும் மூழ்க கிடக்கிறேன்

                                      மூர்ச்சையாகி போகும் முன்னே முத்தமிட்டு அழைத்து செல் உன் பதியை உன்னில் பாதியாய்

                                    உனக்கு எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது.

Monday, February 21, 2011

அரசியலில் எழுதுவது என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும்  பத்திரிக்கை என்ற பெயரில் அரசியல் செய்யும் பிரபல பத்திரிகைகளை நாம் என்ன செய்ய போகிறோம் ?????