Woman's Day

                              சர்வதேச மகளிர் தினம் 

                                               உலகில் பல தினங்கள் கொண்டாடப்படுகின்றன .அவற்றை போன்றுதான் மகளிர் தினம் என்ற ஒன்று கொண்டாடப்படுகிறது என்று கருதினால் அது  தவறு .20 ஆம் நூற்றாண்டின் வரலாற்றில் நடைபெற்ற மாபெரும் ரஷ்ய சோஷலிச புரட்சியின் அடையாளமாக பெண்களுக்கு கிடைத்த மாபெரும் உரிமை மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் .வெறும் தினம் மட்டும் கிடைத்து விடவில்லை உலக நாடுகளிலே முதன்முறையாக ஏன் மனிதனின் நாகரிக வளர்ச்சியின் உச்சமாக கிடைத்த மாபெரும் வரம் இந்த மகளிர் தினம்.வரலாறுகள் எழுதப்பட்டு விட்டன .உலகின் தொன்மையான திராவிட நாகரிகமான ஹரப்பா மொஹஞ்சதரா தோன்றிய இந்திய துணைக் கண்டத்தில் பெண்ணுரிமை எவ்வாறு உள்ளது என்று பார்த்தால் டெல்லி நிர்பயாக்களும் , தூத்துக்குடி புனிதாக்களும்,சிவகங்கை தமிழ் செல்விக்களும் காரி நமது முகத்தில் உமிழும் கேவலங்கள் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் நடந்து கொண்டிருகின்றன.பாரம்பரியம் என்கிறார்கள் ,கட்டுப்பாடு என்கிறார்கள் நதிகளின் பெயரை ,கடவுள்களின் பெயரை கூட பெண்ணின் பெயரில்தான் அமைக் கிறார்கள்.வீட்டிலும் பெண் குழந்தைகளை அதிக பாதுகாப்போடுதான் வைக்கிறார்கள் .பிறகு ஏன் கற்பழிப்புகளும்  ஆசிட் வீச்சுகளும்,கௌரவ கொலைகளும்  நடக்கின்றன . தவறு எங்கே அரசாங்க சட்டத் தில் இருக்கிறதா இல்லை ?சமூக மன நிலையில் இருக்கிறது ,நமது குழந்தைகள் காப்பாற்ற இயலாத எதை பற்றியும் துளியும் கவலைபடாத வக்கற்ற நிலையில்தான் இருக்கிறோம் .தூக்கு தண்டனை மட்டும் இந்த இழிநிலையை மாற்றி விடுமா என்ன ? நம்மிடம் தேவை ஒரு சமூக மாற்றம்  ஒட்டுமொத்த பழமையை குப்பை போல எரித்து விட்டு புது பெரு வழியில் மனித மாண்போடு நடை போட வேண்டும்.இந்த கற்பழிப்புகளையும் ,ஆசிட் வீச்சுகளையும் கௌரவ கொலைகளையும் அரசும் மட்டும் ஒழிக்க முடியுமா என்ன? கலாசாரம் என்ற பெயரில் மூடி வைப்பதினால்தான் மனமும் உடலும் நாற்றமெடுத்து கொண்டிருகிறது.காமம் வீட்டு வரவேற்பு அறையில் விவாதிக்கப்படும் விவாத பொருளாக வேண்டும் பாலியல் கல்வி கட்டாயாமக்கப்பட வேண்டும் இரு பாலர் பள்ளிகள் அதிகமாக்கப்பட வேண்டும் ஆண் பெண் நட்பு எவ்வளவு உணர்வுபூர்வமானது என்று வருங்காலத் தலைமுறை உணர வேண்டும் .கட்டிட தொழிலாளிகள் கூலி தொழிலாளிகள் முதல் தனியார் பள்ளி ஆசரியர்கள் வரை ஆண் பெண் சம ஊதியமும் 
சம மரியாதையும் பெற வேண்டும் .பெண் குழந்தைகள் அனைவருக்கும் தற்காப்பு கலை  அவசியமாக்கப் படல் வேண்டும்.ஆசிட் விற்பனை முழுமையாக முறைபடுத்தப் பட வேண்டும் .ஆண் பெண் நட்பு புரிதல் ,காதல் கல்யாணம் ,வரதட்சணை கொடுப்பது ஆகியவற்றை பற்றிய இன்றைய கண்ணோட்டத்தில் குறும்படங்களும் திரைப்படங்களும் எடுக்கப்பட்டு நாடு முழுவதும் ஒளிபரப்ப வேண்டும் ஆபாச இணையதளங்கள் முழுவதுமாக முடக்கபட்டு திரைக்கதைக்கு ஒவ்வாத ஆபாச படங்கள் அதிக வரி விதிப்புடன் மட்டுமே வெளியிட படவேண்டும்,பெற்றோரே  ஆயினும் பிள்ளைகளை அடிக்க எந்த உரிமையும் இல்லை என்று சட்ட முன் வரவு கொடு வர பட வேண்டும் .ஆதரவு அற்ற  குழந்தைகளை அரசே எடுத்து பராமரித்து வளர்க்க முன் வர வேண்டும்.இளஞ்சிறார் குற்றங்களில்  ஈடுபடுவதை தடுக்க குழந்தை தொழிலாளர் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் .நாடு முழுவதும் கல்லூரி வரை 100% இலவசமாக கல்வி கொடுக்க பட வேண்டும் .கலப்பு திருமணங்கள்  ஊக்குவிக்கப்பட வேண்டும் இவை எல்லாம் பல்வேறு விவாத தளங்களில்  விவாதிக்கப்  பட்டு நிறைவேற்ற  பட்டு வரும் வேளை புதிய விடுதலையும் விடிவையும் நமது வருங்காலத்துக்கு வழங்கும் .பயமில்லா  வாழ்வே பெரு வாழ்வு .மாதரை இழிவு செய்யும் மாந்தரில்லா உலகம் அமைப்போம் .

Comments